என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலாலய பூஜை"
- கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது.
- விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின், உப கோவிலாக, கிழக்கு ரத வீதியில் காசி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடந்து 29 ஆண்டு ஆகி விட்டது. இதனால்கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.
அதற்காக கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவ மூர்த்திக்கு பாலாலயம் செய்யப்பட்டு, வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது.கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோவில் பாலாலய பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது.
வேலூர் பாலாஜி சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்திய பாலாலய பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆரணி நகர தலைவர் ஏ.சி. மணி, ஒன்றிய கவுன்சிலர் கீதாமோகன், கண்ண மங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, அத்திமலைப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர், அத்திமலைப்பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், இலக்கிய அணி செயலாளர் விண்ண மங்கலம் ரவி, ஆரணி ஒன்றிய செயலாளர் அக்ரா பாளையம் அன்பழகன் உள்பட கிராமமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினார்.
- மதுரை முள்ளிபள்ளத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.
- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இங்கு கும்பாபிஷேக புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக கோவில் முன்பு பாலாலய பூஜையை ஸ்ரீவத்சன் குழுவினர் நடத்தினர். நிர்வாக அதிகாரி இளமதி, சோழவந்தான் கோவில் சரக ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பாலாலய விழாவில் கணக்கர் பூபதி, ஆலய பணியாளர் வசந்த், திருப்பணிக்குழு நிர்வாகிகள் தலைவர் கோபாலன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது.
- இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ள நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி:
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவில், பழனி கிரிவீதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இடும்பன் மலைக்கோவில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோவில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் ஆகிய 5 கோவில்களில் இன்று விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல் நடக்கிறது.
பின்னர் 7 மணிக்கு நவகோள் வழிபாடு, முதற்கால யாகம் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு யாகம் நிறைவு பெற்று பேரொளி வழிபாடு நடக்கிறது. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகம் தொடங்கி 6.15 மணிக்கு நிறைவு பெறுகிறது. 6.30 மணிக்கு நவகோள் வழிபாடு, திருக்குடம் புறப்பாடு நடைபெற்று புனிதநீர் தெளித்தல் நடக்கிறது. தொடர்ந்து திருப்பணி தொடங்குகிறது.
இதேபோல் சண்முகநதி தூர்நாச்சிஅம்மன், பழனி வையாபுரிகரை பாதிரி விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், நவகோள் வழிபாடு நடக்கிறது. 6.30 மணிக்கு பின் திருக்குடம் புறப்பாடு, புனிதநீர் தெளித்தல், பேரொளி வழிபாடு நடைபெற்று 7.15 மணிக்கு திருப்பணி தொடங்குகிறது.
பழனி வேணுகோபால பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, நவகோள் வழிபாடு, காப்புக்கட்டுதல், யாகம் நடைபெறுகிறது. பின்னர் 6.45 மணிக்கு திருக்குடம் புறப்பாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்